தோனிக்கு அபராதம் விதித்த போக்குவரத்து காவல்துறை – ஏன் தெரியுமா………..?

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு ராஞ்சி போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

இந்தியா அணியின் முன்னாள் கேப்டன் தோனி தற்போது 2026 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். சென்னை அணிக்காக விளையாடும் தோனி சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சி மேற்கோள்ளும் வீடியோக்கள் வெளியாகின. இந்த நிலையில் தோனிக்கு ராஞ்சி போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியின் சிமாலியா பகுதியில் தோனியின் வீடு அமைந்துள்ளது. சமீபத்தில் தனது வீட்டின் அருகே அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட கூடுதல் வேகத்தில் தோனி காரை இயக்கிச் சென்றுள்ளார். இது அப்பகுதியில் உள்ள காவல்துறையின் தானியங்கி கேமிராவில் பதிவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 183 இன் கீழ், தோனிக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக ராஞ்சி போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.