”தாய் கிழவி” படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு….!

தாய் கிழவி படத்தின் வெற்றியை தொடர்ந்து படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்து அண்மையில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் ’தாய் கிழவி’ . அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.

கடந்த வாரம் வெளியான தாய் கிழவி படம் வசூல் ரீதியிலும் இந்தப் படம் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் படம் வெளியான சில நாட்களில் ரூ. 22 கோடிக்கும் அதிக வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தாய் கிழவி படக்குழு இந்த வெற்றியை கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.