பேருந்தில் படியில் தொங்கிய படி பயணம்-மாணவர்களுக்கு அறிவுரை கூறிய போக்குவரத்து காவலர்கள்

மதுரையில் பள்ளி மாணவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக போக்குவரத்து காவலர்கள் அரசு பேருந்தில் தொங்கிய படி பயணம் செய்யும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பள்ளி மாணவர்கள் அரசுப்பேருந்துகளின்…

மதுரையில் பள்ளி மாணவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக போக்குவரத்து காவலர்கள் அரசு பேருந்தில் தொங்கிய படி பயணம் செய்யும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பள்ளி மாணவர்கள் அரசுப்பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கிய படி ஆபத்தான நிலையில் பயணம் செய்து வருகின்றனர். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மாணவர்கள் பேருந்துகளில் தொங்கியபடி பயணம் செய்வதால் தான் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதனைத்தடுக்க பல்வேறு அறிவுத்தல்கள் மற்றும் நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறையும், போக்குவரத்து துறையும் மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் இன்று மதுரை பழைய விளாங்குடி பகுதியைச் சேர்ந்த 9ம் வகுப்பு பயிலும் 14 வயதான பிரபாகரன் பள்ளிக்கு செல்வதற்காக அரசு பேருந்தில் ஏறி பயணம் செய்த போது ஆரப்பாளையம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது திடிரென தவறி விழுந்து படுகாயமடைந்து உயிரிழந்தார். பள்ளி மாணவன் அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதி்ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் மதுரைசெயின்ட் ஜோசப் பள்ளி அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி தலைமையில் போக்குவரத்து காவலர்கள் பேருந்து நெரிசலில் தொங்கி படி செல்லும் மாணவர்களை கீழே இறக்கி வேறு பேருந்துகளில் செல்ல அறிவுறுத்தினர். தொடர்ந்து மாணவர்களிடம் படியில் பயணம் செய்யக்கூடாது என அறிவுறுத்தினர். மதுரையில் பள்ளி மாணவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக போக்குவரத்து காவல்துறையினர் அரசு பேருந்தில் நெரிசலில் தொங்கிய படி செல்லும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.