மதுரை மாநகரில் நத்தம் மேம்பால சாலை கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த சாலைகளில், இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1.பாண்டியன் ஹோட்டல் சந்திப்பில் இருந்து யூத் ஹாஸ்டல் நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
2. புதூரில் இருந்து அழகர்கோவில் சாலை மார்க்கமாக தல்லாகுளம், தமுக்கம் மற்றும் கோரிப்பாளையம் செல்ல வேண்டிய வாசுவங்கள் பாண்டியன் ஹோட்டல் சந்திப்பினை கடந்து தொடர்ந்து அழகர்கோவில் சாலையில் பயணித்து அம்பேத்கார் சிலை, அவுட்போஸ்ட் வழியாக செல்ல வேண்டும்.
3.புதூரில் இருந்து அழகர்கோவில் சாலை மார்க்கமாக கே.கே.நகர் ஆர்ச் செல்ல வேண்டிய வாகனங்கள் பாண்டியன் ஹோட்டல் சந்திப்பினை கடந்து அழகர்கோவில் சாலையில் தொடர்ந்து பயணித்து அவுட்போஸ்ட் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மதுரை மாநகராட்சி அலுவலக சாலை, மாவட்ட நீதிமன்றம் வழியாக செல்ல வேண்டும்.
4. நத்தம் சாலை IOC சந்திப்பிலிருந்து கே.கே.நகர் ஆர்ச் செல்ல வேண்டிய வாகனங்கள் பாண்டியன் ஹோட்டல் சந்திப்பில் வலது புறம் திரும்பி அழகர் கோவில் சாலையில் பயணித்து அவுட்போஸ்ட் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மதுரை மாநகராட்சி அலுவலக சாலை, மாவட்ட நீதிமன்றம் வழியாக செல்லவேண்டும்.
5. நத்தம் சாலை IOC சந்திப்பிலிருந்து தல்லாகுளம், தமுக்கம் மற்றும் கோரிப்பாளையம் செல்ல வேண்டிய வாகனங்கள் பாண்டியன் ஹோட்டல் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அழகர்கோவில் சாலையில் பயணித்து அம்பேத்கார் சிலை, அவுட்போஸ்ட் வழியாக செல்லவேண்டும்.
6. மதுரை மாநகராட்சி அலுவலக சாலை அவுட்போஸ்ட் சந்திப்பில் இருந்து வலதுபுறம் திரும்பி அம்பேத்கார் சிலை வழியாக பாண்டியன் ஹோட்டல் சந்திப்பிற்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.
7. கே.கே.நகர் ஆர்ச்-லிருந்து, அழகர்கோவில் சாலைக்கு கக்கன் சிலை, மதுரை மாநகராட்சி அலுவலக சாலை. அவுட்போஸ்ட் வழியாக வலதுபுறம் திரும்பி பாரதியார் பூங்கா, பாண்டியன் ஹோட்டல் சந்திப்பு வழியாக தற்சமயம் சென்று வரும் வாகன போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.
இவ்வழித்தட வாகனங்கள் கக்கன் சிலையில் வலதுபுறம் திரும்பி யூத் ஹாஸ்டல், பாண்டியன் ஹோட்டல் வழியாக அழகர்கோவில் சாலைக்கு செல்ல வேண்டும்.
மேற்கண்ட வாகன போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மதுரை காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.