தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை – உ.பி. அரசு திட்டம்

உத்தரப்பிரதேசத்தில் தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு ஓராண்டுக்கு மாதந்தோறும் 17 ஆயிரத்து 500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.   உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தேச உலகளாவிய முதலீட்டாளர்…

உத்தரப்பிரதேசத்தில் தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு ஓராண்டுக்கு மாதந்தோறும் 17 ஆயிரத்து 500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

 

உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தேச உலகளாவிய முதலீட்டாளர் உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இதற்காக அம்மாநில அரசு ஸ்டார்ட்-அப்கான புதிய கொள்கைகளை கொண்டு வருகிறது. இந்த கொள்கைக்கான வரைவு தயாரிக்கப்பட்டு விரைவில் அம்மாநில அமைச்சரவையின் ஒப்புதலுக்கு தாக்கல் செய்யப்படுகிறது.

ஸ்டார்ட்-அப்களுக்கான புதிய கொள்கையில் பல்வேறு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் சேர்க்கப்பட்டுள்ளன. புதிய தயாரிப்பு நிறுவனத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கவும், சந்தையில் அறிமுகப்படுத்த 7.5 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கவும் அதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாலிசியில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் ஸ்டார்ட்-அப்களுக்கு மாதாந்திர உதவித்தொகை உட்பட மொத்தம் 14.60 லட்சம் ரூபாய் நிதி உதவி கிடைக்கும்.

அதேபோல், புதிதாக தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக 17 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கவும், ஓராண்டுக்கு இந்த தொகை வழங்கப்படும் என்றும் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். மேலும் உத்தரப்பிரதேச அரசு தகவல் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் துறையை உருவாக்கியுள்ளது. பெண்களின் தலைமைத்துவம், சூரிய ஆற்றல், வட்டப் பொருளாதாரம், காலநிலை மாற்றம் மற்றும் கிராமப்புறத் துறையில் செல்வாக்கு செலுத்தும் பகுதிகள் ஆகிய துறைகளில் ஸ்டார்ட்-அப் கொள்கைகளில் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் ஏற்கனவே ஸ்டார்ட்-அப் கொள்கைகள் அமலில் இருப்பதாகவும், ஆனால் மாறிய சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் புதிய துறைகளின் தேவையை கருத்தில் கொண்டு, அதில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய கொள்கைகளை அமல்படுத்திய பிறகு, ஏற்கனவே உள்ள 7,200 பதிவுசெய்யப்பட்ட ஸ்டார்ட் அப்கள் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.