சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே நடைபெற்ற பாரம்பரிய மீன் பிடி திருவிழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே ஓ.சிறுவயல் கிராமத்தில் இன்று பாரம்பரிய முறைப்படி மீன் பிடிக்கும் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆண்டுக்கு ஒருமுறை கோடை காலத்தின் துவக்கத்தில் நடத்தப்படும் இந்த பிரம்மாண்டமான மீன் பிடி திருவிழாவில் சுற்றுவட்டார மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு பாரம்பரிய முறைப்படி கச்சா, ஊத்தா ஆகிய மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்
பிடிப்பது வழக்கமாகும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி இந்த ஆண்டும் வழக்கம் போல், இன்று நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கச்சா, ஊத்தா போன்ற மீன்பிடி உபகரணங்களுடன் பங்கேற்றனர். மீன்கள் நிறைந்திருந்த கண்மாயில் இறங்கியவர்களுக்கு கட்லா, ரோகு, மிருகால், கெண்டை, ஜிலேபி கெண்டை உள்ளிட்ட பல்வேறு வகை மீன்கள் கிடைத்தது. இதனால் மீன்பிடித் திருவிழாவில் கலந்து கொண்ட கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவரவர் பிடித்த மீன்களை சாக்கு பைகளில் போட்டு கிராம மக்கள் எடுத்துச் சென்றனர்.
ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் மீன்பிடித் திருவிழாவானது, இந்த ஆண்டு தாமதமாக மதியம் 11 மணிக்கு துவங்கி 12.30 மணிஅளவில் நிறைவு பெற்றது. கிராம மக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த மீன்பிடி திருவிழாவில் கிராம மக்கள் கண்மாயில் இறங்கி மீன்பிடிக்கும் காட்சியை ஏராளமானோர் கண்டு களித்தனர்.
- பி.ஜேம்ஸ் லிசா