2 குழந்தைகளுடன் வியாபாரி கிணற்றில் குதித்து உயிரிழப்பு

திருப்பூர் அருகே, 2 குழந்தைகளுடன் வியாபாரி கிணற்றில் குதித்துஉயிரை மாய்த்துக்  கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளகோவில் முத்தூர் அருகே உள்ள துத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெகனுக்கு காயத்ரி என்ற மனைவியும், 4 மற்றும்…

திருப்பூர் அருகே, 2 குழந்தைகளுடன் வியாபாரி கிணற்றில் குதித்துஉயிரை மாய்த்துக்  கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளகோவில் முத்தூர் அருகே உள்ள துத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெகனுக்கு காயத்ரி என்ற மனைவியும், 4 மற்றும் 2 வயதுகளில் 2 பெண் குழந்தைகளும் இருந்தனர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள காசிப்பாளையத்தில் ஜெகன் குடும்பத்துடன் தங்கியிருந்து ஆடுகள் வியாபாரம் செய்துள்ளனர்.

இந்நிலையில், ஜெகன் தமது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, சொந்த ஊரான துத்திக்குளத்திற்கு வந்துள்ளார். பின்னர், வெளியே சென்றுவருவதாக உறவினர்களிடம் கூறிவிட்டு ஜெகன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார்.
நீண்ட நேரமாக அவர் வீடு திரும்பாததால், உறவினர்கள் அவரை தேடியபோது, வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குழந்தைகளுடன் அவர் சடலமாக கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த போலீசார், 3 சடலங்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் ஜெகனுக்கு கடன் பிரச்சினை இருப்பது தெரியவந்தது. கடன் பிரச்சினை காரணமாக அவர் தஉயிரை மாய்த்துக்கொண்டாரா, வேறு காரணங்கள் உள்ளனவா என்பன உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.