தனியார் மருத்துவமனை ஊழியர்களை நோயாளியின் உறவினர்கள் தாக்கிய CCTV காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் ஆறுச்சாமி. கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், ஒரு மாதம் கழித்து மருத்துவமனைக்கு வந்த ஆறுச்சாமியின் உறவினர்கள், சிகிச்சை விபரம் மற்றும் கட்டணத்திற்கான பில் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
அப்போது, மருத்துவமனை ஊழியர்களை, உறவினர்கள் தாக்கிய CCTV காட்சி வெளியாகியுள்ளது. மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில், உறவினர்கள் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவர்கள் மீது
தாக்குதல், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளுக்கு கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







