இந்தியா தடுப்பூசி தயாரிக்குமா? தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

இந்தியா தடுப்பூசி தயாரிக்குமா என உலக நாடுகள் சந்தேகப்பட்ட நிலையில், தற்போது 100 நாடுகளுக்கு மத்திய அரசு தடுப்பூசியை ஏற்றுமதி செய்துள்ளதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை பூந்தமல்லி அருகே…

இந்தியா தடுப்பூசி தயாரிக்குமா என உலக நாடுகள் சந்தேகப்பட்ட நிலையில், தற்போது 100 நாடுகளுக்கு மத்திய அரசு தடுப்பூசியை ஏற்றுமதி செய்துள்ளதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள சவிதா மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், இந்தியா தயாரித்த தடுப்பூசியைத்தான் இந்தியர்கள் செலுத்திக் கொண்டுள்ளதாகவும், இதுவரை நாடு முழுவதும் 100 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உலகத்தில் உள்ள பெரும்பாலான தலைவர்கள் இந்திய தடுப்பூசியை தான் செலுத்திக்கொண்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், வளர்ந்த நாடுகளே இந்திய தடுப்பூசியை எதிர்பாத்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.