தொடர் விடுமுறையால் உதகையில் உள்ள சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகையில் குளுமையான சூழல் நிலவுவதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி, வார விடுமுறை நாட்கள் என தொடர் விடுமுறையால் வழக்கத்திற்கு மாறாக ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள் ளனர்.
தாவரவியல் பூங்கா, கண்ணாடி மாளிகையில் உள்ள மலர் கண்காட்சி உள்ளிட்டவற்றை சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். குடும்பத்துடன் சேர்ந்து செல்பி எடுத்து மகிழ்ந்து சுற்றுலாப் பயணிகள், ரோஜா பூங்காவில் பூத்து குலுங்கிய வண்ண மலர் களையும், இயற்கை அழகையும் பார்வையிட்டனர்.
அதே போன்று, பைக்காரா படகு இல்லம், சூட்டிங் ஸ்பாட் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் ஏராளமானோர் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உதகை அரசு தாவரவியல் பூங்காவுக்கு கடந்த மூன்று நாட்களில் 20,000 க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். முழு ஊரடங்குக்கு பின்னர் சுற்றுலா தலங்கள் களைகட்டி உள்ளது








