குஜராத்தில், முதலமைச்சர் விஜய் ரூபானி ராஜினாமா செய்ததை அடுத்து புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடங்கி இருக்கிறது.
பாஜகவைச் சேர்ந்த 65 வயதான விஜய் ரூபானி, 2016ம் ஆண்டு முதல் குஜராத் மாநில முதலமைச்சராக பதவி வகித்து வந்தார். பாஜகவின் கோட்டையாக கருதப்படும் குஜராத் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், விஜய் ரூபானி தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அகமதாபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்ற விஜய் ரூபானி, தமது ராஜினாமா கடிதத்தை, ஆளுநர் ஆச்சார்யா தேவ்ராத்திடம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சராக பொறுப்பு வழங்கி, மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்த பாஜக தலைமைக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.
இதையடுத்து பாஜகவின் மூத்த தலைவர்கள் சிலர் குஜராத்துக்கு சென்றனர். காந்தி நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவர்கள் ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, துணை முதலமைச்சர் நிதின் படேல், மாநில பாஜக தலைவர் சிஆர் பாட்டில் மற்றும் ரூபானி பங்கேற்றனர்.
இதையடுத்து புதிய முதலைச்சரை தேர்வு செய்வதற்கான பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இப்போது தொடங்கி இருக்கிறது.