தூத்துக்குடியில் பல்வேறு வசதிகளுடன் 29 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள அறிவியல் தொழில்நுட்ப பூங்கா பணிகளை அமைச்சர் கீதாஜீவன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடியில் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல், மற்றும் கணித பூங்கா, சிட்டி லேர்னிங் சென்டர் ஆகியவை அமைக்கப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அம்பேத்கர் நகர் பகுதியில் 9 ஏக்கர் பரப்பளவில், 29 கோடி ரூபாய் செலவில் அமைய உள்ள இந்த திட்டத்தின் பணிகளை, சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இந்த பூங்காவில் மினி திரையரங்கம், அறிவியல் மண்டலம், விண்வெளி மண்டலம், மெய்நிகர் கண்காட்சி கூட்டம் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த திட்டம் தென்மாவட்டங்களில் முதல்முறையாக தூத்துக்குடியில் தொடங்கியுள்ளது குறிப் பிடத்தக்கது.