கத்தாரில் நடைபெற்று வரும் FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக்அவுட் சுற்றுகள் இன்று முதல் தொடங்குகிறது.
இந்த நாக் அவுட் சுற்று போட்டி ஒருவேளை சமனில் முடிந்தால், போட்டியைத் தீர்மானிக்கக் கூடுதலாக 30 நிமிடம் வழங்கப்படும். அப்படி அந்த 30 நிமிடத்திலும் போட்டி சமனில் முடிந்தால் இரு அணிகளுக்கும் பெனால்டி சூட் அவுட் வாய்ப்பு அளிக்கப்பட்டு இறுதி முடிவு தீர்மானிக்கப்படும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முன்னதாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முந்திய 16 அணிகள் பலப்பரீட்சை நடத்தக் காத்திருக்கின்றன. இந்நிலையில் இந்த நாக்அவுட் சுற்றின் முதல் போட்டியில் இன்று இரவு 8.30 மணிக்கு அமெரிக்க – நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
கடந்த ஐந்து உலகக் கோப்பையில் நான்கு முறை காலிறுதிக்கு முன்னேறியுள்ள நெதர்லாந்து அணி இதுவரை ஐரோப்பிய நாடுகளைத் தவிர வேறு எந்த நாடுகளிடமும் தோற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதைத் தொடர்ந்து மற்றொரு நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான அர்ஜெண்டினா அணி ஆஸ்திரேலியா அணியை நள்ளிரவு 12.30 மணிக்கு எதிர்கொள்கிறது.
அர்ஜெண்டினா அணி கடந்த உலகக் கோப்பை போட்டியில் நாக் அவுட் சுற்றோடு வெளியேறியதால் இம்முறை மெஸ்ஸி தலைமையில் கோப்பையை வெள்ள கடுமையாக பலபரிச்சை நடத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.