குற்றால அருவிகளில் சீரான நீர் வரத்தை தொடர்ந்து அதிகாலை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் களைகட்டும். நடப்பு ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கிய நிலையில், குற்றால சீசன் துவங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக வெயில் அதிகமாக இருந்து வந்த நிலையில், நேற்று மாலையிலிருந்து தொடர்ந்து சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வர தொடங்கியது. தண்ணீர் சீராக வந்த நிலையில், கன மழை காரணமாக அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குளிக்க காவல்துறையினர் தடை விதித்தனர்.






