நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் நாளை செயல்படாது என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக…

புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் நாளை செயல்படாது என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறி தீவிர புயலாக நகர்ந்து வருகிறது.  சென்னையில் இருந்து 280 கி.மீ தொலைவில் தென் கிழக்கு திசையில் புயல் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.  ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.  தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:  செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 3000 கன அடி நீர் திறப்பு! 

மேலும் பழைய கட்டிடங்களில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் நாளை செயல்படாது என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் நாளை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கடை பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.