தக்காளி விலை இன்று முதல் குறைவு: வியாபாரிகள் சங்கம்

சென்னை கோயம்பேட்டில் இன்று முதல் ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்கப்படும் என தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தக்காளி ஏற்றிவரும் வாகனங்களை…

சென்னை கோயம்பேட்டில் இன்று முதல் ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்கப்படும் என தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தக்காளி ஏற்றிவரும் வாகனங்களை நிறுத்துவதற்கு ஒரு ஏக்கர் பரப்பளவிற்கு குறையாத இடத்தை ஒதுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, இன்று அதிகாலை முதல் லாரிகள் நிறுத்த அனுமதிக்கப்படுவதால், தக்காளியின் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் சிவா, இன்று முதல் ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்கப்படும் என தெரிவித்தார்.

சில நாட்களுக்கு முன், மழை காரணமாக விளைநிலங்களில் நீர் தேங்கியதால், தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்ததால், விலை உயர்ந்தது. ஒரு கிலோ நாட்டுத் தக்காளி விலை 100 ரூபாயாகவும், நவீன தக்காளியின் விலை 120ஆகவும் விற்பனை யானது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.