முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஐபிஎல் வீரர்கள் காலக்கெடு இன்றோடு முடிவு: தோனி, கோலி, ரோகித் தக்கவைப்பு

ஐபிஎல் அணிகள், வீரர்களை தக்க வைப்பதற்கான காலக்கெடு இன்றோடு முடிகிறது. முன்னணி வீரர்கள் சிலர் அதே அணியில் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் வீரர்களுக்கான மெகா ஏலம் ஜனவரியில் நடை பெறும் என்று கூறப்படுகிறது. இந்த தொடரில், புதிதாக அகமதாபாத், லக்னோ அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதற்கு முன் ஏற்கனவே உள்ள 8 அணிகளும் தங்களிடம் 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்து கொள்ள ஐ.பி.எல். அனுமதி அளித்துள்ளது. தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த 4 வீரர்களில், 2 பேர் இந்தியர்களாகவும் 2 வெளிநாட்டு வீரர்கள்  இருக்கலாம் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு அணி 4 வீரர்களை தக்க வைத்தால், அவர்களின் ஊதியம், முறையே ரூ. 16 கோடி, ரூ.12 கோடி, ரூ.8 கோடி, ரூ.6 கோடி என்று மொத்தம் ரூ.42 கோடியை ஒதுக்க வேண்டும். மீதமுள்ள ரூ.48 கோடியை கொண்டுதான் மற்ற வீரர்களை ஏலத்தில் வாங்க வேண்டும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கேப்டன் தோனி, ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி ஆகியோரை தக்க வைத்துக்கொள்ள இருக்கிறது. கொல்கத்தா அணி சுனில் நரேன், ஆண்ட்ரே ரஸல், வெங்கடேஷ் ஐயர், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தொடர இருக்கின்றனர்.

சன் ரைசர்ஸ் அணி, கேப்டன் கேன் வில்லியம்சனையும் மும்பை இண்டியன்ஸ் ரோகித் சர்மா, பும்ரா ஆகியோரையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விராத் கோலி, கிளன் மேக்ஸ்வெல்-லையும், டெல்லி கேப்பிடல்ஸ், ரிஷப் பண்ட், பிருத்வி ஷா, அக்சர் படேல், அன்ரிச் நோர்கே ஆகியோரையும் ராஜஸ்தான் ராயல்ஸ் சஞ்சு சாம்சனையும் தக்க வைக்க முடிவு செய்துள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் கே.எல். ராகுல் ஏலத்திற்கு வருவார் என்று தெரிகிறது. புதிய அகமதாபாத், லக்னோ அணிகள், மற்ற அணிகள் விடுவிக்கும் வீரர்களில் இருந்து தலா 3 பேரை ஏலத்திற்கு முன்பாக தேர்ந்தெடுக்க இருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் கைது

Jeba Arul Robinson

மாணவர்களுக்கு குட் நியூஸ்… ஆப்பிளின் ‘Back to School’ சலுகை தொடங்கியாச்சு…

Web Editor

பெகாசஸ் விவகாரத்தில் அமித்ஷா பதவி விலக வேண்டும்: ராகுல் காந்தி

Gayathri Venkatesan