இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு – வாகன ஓட்டிகள் அதிருப்தி!

நாடு முழுவதும் நாளை சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ள நிலையில், அதற்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் ஆண்டுக்கு ஒருமுறை சுங்கச்சாவடி கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. அதற்கேற்ப இன்று…

நாடு முழுவதும் நாளை சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ள நிலையில், அதற்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் ஆண்டுக்கு ஒருமுறை சுங்கச்சாவடி கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. அதற்கேற்ப இன்று நள்ளிரவு 12 மணி முதல், சுங்கக் கட்டணத்தை 5 – 10 சதவீதம் வரை உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில், 29 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது. அதன்படி, வாகனங்கள் ஒரு முறை சென்று வர 47 ரூபாய் முதல் 301 ரூபாய் வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, கார், ஜீப், வேன், இலகுரக வாகனம் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு ஒருமுறை சென்று வர முந்தைய கட்டணம் 45 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில், கூடுதலாக 2 ரூபாய் அதிகரித்து நாளை முதல் 47 ரூபாயாக வசூலிக்கப்படவுள்ளது.

இதையும் படியுங்கள் : NCL 2023 : கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தை வீழ்த்தி ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமம் வெற்றி

இரண்டு ஆக்சில் சரக்கு வாகனம் மற்றும் பேருந்து ஆகிய வாகனங்களுக்கு ஒருமுறை
சென்று வர முந்தைய கட்டணமாக 135 ரூபாயாக இருந்த நிலையில், நாளை முதல் கூடுதலாக 22 ரூபாய் விலை உயர்த்தப்பட்டு, 157 ரூபாயாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மூன்று ஆக்சில் வணிக வாகனம் ஒருமுறை சென்று வர முந்தைய கட்டணம் 165 ரூபாய் வசூலிக்கபட்ட நிலையில், அது நாளை முதல் 172 ரூபாயாக உயர்த்தப்படவுள்ளது. அதிகபட்சமாக ஏழு மற்றும் அதிக அச்சுகள் கொண்ட பெரிய வாகனங்களின் சுங்க கட்டணம் 270 ரூபாயிலிருந்து 301 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சுங்கக் கட்டண உயர்வால், கூடுதல் செலவு ஏற்படும் என்பதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.