என்.சி.எல் 2023 கிரிக்கெட் தொடரில், கோவை JCT பொறியியல் கல்லூரிக்கு எதிரான போட்டியில் சுகுணா கல்லூரி 109 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் என்.சி.எல் 2023 மண்டல அளவிலான டி20 கிரிக்கெட் தொடர் தமிழ்நாடு முழுவதும் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கோவை மண்டலத்தில், கோவை சுகுணா கல்லூரியுடன் JCT பொறியியல் கல்லூரி அணி மோதியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படியுங்கள் : NCL 2023 : கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தை வீழ்த்தி ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமம் வெற்றி
இதில் டாஸ் வென்ற JCT கல்லூரி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சுகுணா கல்லூரி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 163 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பசுபதி 42 பந்துகளில் 57 ரன்கள் விளாசினார். JCT கல்லூரி அணி, NCL2023 தொடரிலேயே இதுவரை இல்லாத வகையில் 35 ஒய்டுகள், 1 நோ பால் உட்பட 41 எக்ஸ்டிரா ரன்களை வழங்கி மோசமான சாதனை படைத்தது.
இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய JCT கல்லூரி அணியை, சுகுணா கல்லூரி துவம்சம் செய்தது. JCT கல்லூரி அணி 11.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 109 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. சுகுணா கல்லூரி வீரர் நிவாஸ் சிறப்பாக பந்துவீசி 2.2 ஓவர்களில் வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இப்போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய நிவாஸ், ஆட்டநாயகன் விருதை பெற்றார். அவருக்கு போட்டியின் நடுவர் சத்யன் ஆட்ட நாயகன் விருதினை வழங்கினார்.