முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா நிலவரம்

தமிழ்நாட்டில் புதிதாக 1,652 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், 1,58,593 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,652 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கொரோனாவால் 25,99,255 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றில் இருந்து 1,859 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25,45,178 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,686 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் புதிதாக 183 பேருக்குத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோவையில் 205 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் 152 பேருக்கும் சேலத்தில் 79 பேருக்கும் புதிதாகத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 24 மாவட்டங்களில் கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. 19,391 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

10.5 சதவீத உள் ஒதுக்கீடு : தடை கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Niruban Chakkaaravarthi

நிலவு பயணம், வீட்டிற்கு ஒரு ஹெலிகாப்டர்: வாக்குறுதிகளை அள்ளிவீசிய வேட்பாளர்

எல்.ரேணுகாதேவி

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு 100 டாலர் ஊக்கத் தொகை

Ezhilarasan