முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னையில் 3 உணவகங்களுக்கு ரூ.52,000 அபராதம்

சென்னையில் சுகாதார சீர்கேடு கண்டறியப்பட்ட 3 உணவகங்களுக்கு ரூ.52,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை உணவகங்களில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி சுகாதாரமான முறையில் உணவு பொருட்கள் கையாளப்படுகின்றனவா எனவும் பதப்படுத்திய உணவுகளின் தன்மை குறித்தும் ஆய்வு செய்ய ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள மண்டல நல அலுவலரின் தலைமையில் 16 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுக்கள், சென்னையில் உள்ள உணவகங்களில் சேமிப்பில் உள்ள உணவு பொருட்கள். மளிகைப்பொருட்கள், பால், காய்கறிகள். பழங்கள் மற்றும் இதர பொருட்களுக்கான சேமிப்பு வசதிகள், மூலப்பொருட்களை சேமிக்கும் இடங்கள், குளிருட்டிகள் குளிர்சாதன பெட்டிகள் உட்பட பல்வேறு வகையான உணவு சேமிப்பு முறைகள் மற்றும் சமைக்கும் உணவகங்களில் மக்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் உயிரினங்களான நாய் & பூனை எலி நடமாட்டம் குறித்தும் உணவு சமைக்கும் இடங்கள் மற்றும் பாத்திரங்கள் தூய்மையாக பராமரிப்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறது.

அதன்படி, சமீபத்தில் அனைத்து மண்டலங்களில் உள்ள 45 பகுதிகள் அடங்கிய 155 உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுகளின் போது 61 உணவகங்களில் உணவு பதப்படுத்துதல் மற்றும் சேமிப்பு முறைகளில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இவ்வுணவகங்களில் உணவு பதப்படுத்துதல் மற்றும் சேமிக்கும் முறையான வழிமுறைகளை பின்பற்றுமாறு உணவகங்களின் மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8 உணவகங்களில் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் 16 கிலோ எடையுள்ள ஆரோக்கியமற்ற உணவு பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பந்தப்பட்ட உணவக நிர்வாகிகளிடம் பொது சுகாதார சட்டத்தின் கீழ் விளக்கம் கோரப்பட்டுள்ளது என்றும் பெருமளவு விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 3 உணவகங்களுக்கு ரூ 52,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது எனவும் இந்தக்குழு தெரிவித்துள்ளது. எனவே அனைத்து உணவகங்களும் அரசின் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளையும் உணவகங்களுக்கான பொது சுகாதார சட்டத்தின் படியும் தரமான சுகாதாரமான உணவினை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

தமிழக முதலமைச்சருடன் நேருக்குநேர் விவாதத்திற்கு வர தயார்; ஸ்டாலின் நிபந்தனையுடன் அறிவிப்பு

Saravana Kumar

கொரோனா அச்சத்தால் வீரர்கள் விலகல்: ஐபில் போட்டிகள் தொடர்ந்து நடைபெறுமா? பிசிசிஐ விளக்கம்

Halley karthi

சென்னையில் நிவர் புயல் பாதித்த பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு!

Arun