முக்கியச் செய்திகள் தமிழகம்

நியாய விலைக் கடைகளில் ஆய்வு மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு மேற்கொண்டு ஒவ்வொரு மாதமும் 10-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்குத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு அரசின் கூடுதல் செயலாளர் இந்த உத்தரவு தொடர்பான கடிதத்தை அனுப்பியுள்ளார். அந்த உத்தரவு கடிதத்தில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாயவிலைக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டு ஒவ்வொரு மாதமும் 10-ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டத்தில் மாதத்திற்கு 10 நியாயவிலைக்கடைகளை ஆய்வு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர், கூடுதல் ஆட்சியர், உணவுப் பொருள் வழங்கல் துறையின் கூடுதல் ஆணையாளர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அனைவருக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒவ்வொரு மாதமும் 10 நியாயவிலைக்கடைகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்யவேண்டும். அதேபோல் 30 நியாய விலைக் கடைகளில் மாவட்ட வழங்கல் துறை அதிகாரி ஆய்வு மேற்கொள்ளவேண்டும்.

மேலும் துணை ஆட்சியர், கோட்டாட்சியர் மாதம்தோறும் 20 நியாய விலை கடைகளில் ஆய்வு மேற்கொள்ளவேண்டும். நியாய விலைக் கடைகளில் மேற்குறிப்பிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வுச் செய்து அங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள உணவுப்பொருட்களின் விவரங்கள், ஊழியர்களின் தேவைகள் மற்றும் அடிப்படை வசதிகள் ஆய்வு மேற்கொள்ளவேண்டும். இதற்காக ஒவ்வொரு அதிகாரிகளுக்கு தனித்தனியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015-16-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த திட்டம் அப்போது நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு நியாய விலை கடைகளில் ஆய்வு மேற்கொள்ளும் கூட்டுறவுச் சங்க பதிவாளரும் மாவட்ட ஆட்சியரும் ஒவ்வொரு மாதமும் 10-ம் தேதிக்குள் நேரடியாகத் தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்” என உத்தரவு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு நியாய விலை கடைகளில் மூலம் மக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கொரோனா நிவாரண தொகை மற்றும் கொரோனா நிவாரண பொருட்கள் நியாய விலை கடைகள் மூலம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் நியாய விலை கடைகளில் உணவுப் பொருட்களின் தேவை குறித்தும் கடைகளுக்குத் தேவையான அடிப்படைவசதிகள் குறித்த அறிந்துகொண்டு அதற்கேற்றாற்போல் மக்களுக்கு உணவுப் பொருட்கள் தடையில்லாமல் வழங்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

யார் மனதும் கஷ்டப்படும் அளவிற்கு படம் எடுக்க மாட்டேன் – இயக்குநர் முத்தையா உருக்கம்

Dinesh A

காஞ்சிபுரம் அனாதீன நிலம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு: உயர் நீதிமன்றம்

சசிகலாவின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம்: மருத்துவர்கள் தகவல்!

Jayapriya