முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 செய்திகள்

பிரதமர் மோடி மதுரையில் இன்று தேர்தல் பரப்புரை!

மதுரை வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக – பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காலை 11 மணி அளவில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

தமிழகத்தில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு மதுரை வந்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று இரவு அவர் சாமி தரிசனம் செய்தார். இந்நிலையில் இன்று மதுரை பாண்டிகோயில் சுற்றுச்சாலை அருகே நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற இருக்கிறார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியுடன் பரப்புரையில் ஈடுபடுகின்றனர். இன்று காலை 11.15 க்கு நடைபெறும் பரப்புரைக் கூட்டத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக-பாஜக கூட்டணி வேட்பாளர்கள் 36 பேருக்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் மோடி பரப்புரையில் ஈடுபடுகிறார். தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் நரேந்திரமோடி மதுரை வந்துள்ளதை அடுத்து நகரை சுற்றியும், பரப்புரை மேற்கொள்ளும் இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் 3 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

ஒரு வருடத்துக்குப் பிறகு பஞ்சாப்பில் பள்ளிகள் திறப்பு

Gayathri Venkatesan

புகழ்பெற்ற இந்திய தடகள வீரர் மில்கா சிங் காலமானார்!

Gayathri Venkatesan

கையிருப்பில் 7 லட்சம் தடுப்பூசிகள்; அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

Saravana Kumar