முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

கொரோனாவால் இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பு

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 853 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரையிலான மொத்த உயிரிழப்பு 4 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 46,617 பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3,04,58,251 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 59,384 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 2,95,48,302 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர் .

தற்போது 5,09,637 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் நோய்த்தொற்றால் 853 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,00,312 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்ந்து 50-வது நாளாகத் தினசரி கொரோனா பாதிப்பை விடக் குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், நாட்டில் கொரோனாவால் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கின்றனர். உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில், அமெரிக்கா, பிரேசிலை அடுத்து இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

ரூ 50,000 க்கு மேல் கொண்டு சென்றால் ஆவணம் காண்பிக்க வேண்டும்: சத்யபிரதா சாகு

Niruban Chakkaaravarthi

இறுதி போட்டிக்கு முன்னேறியது இத்தாலி அணி

Vandhana

காகிதம் கொண்டு கலை படைப்புகள் செதுக்கும் அகமதாபாத் இளைஞர்!

Halley karthi