புல்வாமா பகுதியில் மீண்டும் பதற்றம்

புல்வாமா பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் துப்பாக்கிச்சூடு நடந்தது. காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஹன்ஜன் என்ற கிராமத்தில், இன்று காலையில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் துப்பாக்கி சூடு நடந்தது. இது…

புல்வாமா பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் துப்பாக்கிச்சூடு நடந்தது.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஹன்ஜன் என்ற கிராமத்தில், இன்று காலையில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் துப்பாக்கி சூடு நடந்தது. இது தொடர்பாக காஷ்மீர் காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ட்விட்டில் ‘புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஹன்ஜன் கிராமத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுக்காப்பு துறையினருக்கும் துப்பாக்கி சூடு நடந்தது. இதுதொடர்பான முழுமையான விவரங்கள் தொடர்ந்து பதிவிடப்படும்’என்று பதிவிடப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக காஷ்மீர் காவல்துறை அதிகாரி கூறுகையில் ‘ஹன்ஜன் கிராமத்தில் தீவிரவாதிகள் இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, காவல்துறையினர், சிஆர்பிஎப் கால்துறையினர், ராணுவத்தினர் ஆகியோர் அடங்கிய குழு அந்த கிராமத்திற்கு சென்றது. தீவிரவாதிகள் இருந்த பகுதியை பாதுகாப்பு படையினர் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டனர். இதைத்தொடர்ந்து தீவிரவாதிகள் தரப்பில் பதில் தாக்குதல் நடந்தது.’ என்று அவர் கூறினார். கடந்த 6 மாதத்தில் மட்டும் பாதுகாப்பு படையினரால் 61 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடதக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.