முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா நிலவரம்

தமிழ்நாட்டில் புதிதாக 674 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. சில நாட்களுக்கு முன் 700-க்கும் கீழாக குறைந்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில், 674ஆக தொற்றுப் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27,35,389ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுப் பாதிப்பில் இருந்து இன்று 731 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26,87,414 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுப் பாதிக்கப்பட்டவர்களில் 7,723 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36,612ஆக அதிகரித்துள்ளது. மாவட்டங்களை பொறுத்தவரை சென்னையில் 116 பேருக்கும் கோயம்புத்தூரில் 102 பேருக்கும் தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் ‘ஒமைக்ரான்’ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டையொட்டியுள்ள ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளாவிலும் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி சவால்!

Niruban Chakkaaravarthi

கொட்டும் மழையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; 4வது நாளாக ஆய்வு

Ezhilarasan

சப்பரத் திருவிழாவில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு உதவி – முதலமைச்சர்

Arivazhagan CM