முக்கியச் செய்திகள் தமிழகம்

கொரோனாவை எதிர்க்கொண்டு மீண்ட இந்த தலைமுறை எதையும் சாதிக்கும்

சென்னையில் நடைபெற்ற அறிவுசார் கலைத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எம்பி கனிமொழி பரிசுகளை வழங்கினார்.

அறிவுசார் கலைத்திறன் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு கோப்பைகளை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வழங்கினார்.

சென்னை மயிலாப்பூரிலுள்ள பி.எஸ் மேல்நிலைப்பள்ளியில் அன்பின் பாதை அறக்கட்டளை, KEH குழுமம் மற்றும் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலு இணைந்து ‘எங்கள் மயிலாப்பூர்’ என்ற பள்ளிகளுக்கான மாபெரும் அறிவுசார் மற்றும் கலைத் திறன் போட்டி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவியர்கள் இப்போட்டிகளில் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கனிமொழி பரிசு கோப்பைகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து சிறப்புரையாற்றி அவர், “அனைத்து பெருமைகளும் சரியான சதவிகிதத்துடன் கொண்டு மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் இடம் மைலாப்பூர். வெற்றி தோல்வி என்பது நமது எதிர்காலத்தை முடிவு செய்வது இல்லை. அதனையும் தாண்டி நிறைய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆகையால் தோல்வியை கண்டு மாணவர்கள் அச்சப்பட வேண்டாம்.

கொரோனா காலத்தில் தனிமை என்னும் கொடுமையை சமாளித்து தற்போது மாணவர்கள் பள்ளிகளுக்கு வரத்துவங்கியுள்ளனர். இந்த பேரிடரை எதிர்கொண்டு அதனை கடந்து வந்த இந்த இளைய தலைமுறை எதையும் சாதிக்கக்கூடிய புதிய தலைமுறை.” என்று கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

தனுஷ் பட ஷூட்டிங்கில் பிரகாஷ் ராஜுக்கு எலும்பு முறிவு

Gayathri Venkatesan

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

Halley Karthik

ரெம்டெசிவர் ஒதுக்கீட்டு அளவு உயர்வு: மத்திய அரசுக்கு முதல்வர் நன்றி!

Halley Karthik