இஸ்ரேலில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் – ’இன்றும் எப்போதும் இஸ்ரேலுடன்’ என X தளத்தில் பதிவு!

காசாவில் இஸ்ரேல் ராணுவத்தின் குண்டுமழை தொடரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை தொடர்ந்து பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இன்று இஸ்ரேலுக்கு சென்றுள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின்…

காசாவில் இஸ்ரேல் ராணுவத்தின் குண்டுமழை தொடரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை தொடர்ந்து பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இன்று இஸ்ரேலுக்கு சென்றுள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்துள்ளது.  ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசியும்,  இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.  இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 13வது நாளாக இன்றும் வன்முறை நீடித்து வருகிறது.

இஸ்ரேலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும், பாலஸ்தீனத்துக்கு அரபு நாடுகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்த போர் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், இரு தரப்பிலும் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே, போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக நேற்று இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அந்நாட்டு பிரதமர் நெதன்யாகுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்தப் பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், காஸா மீது தொடர்ந்து இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தினர். இதனால் அதிருப்தி அடைந்த அரபு தலைவர்கள், ஜோர்டானில் பைடன் தலைமையில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்தனர்.

https://twitter.com/RishiSunak/status/1714895569334735124?t=fCWCCMBoGWAV27ASC0-kjg&s=08

இந்த இக்கட்டான சூழலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனைத் தொடர்ந்து பிரிட்டன் பிரதமர் ரிஷிசுனக்கும் இஸ்ரேல் சென்றுள்ளார்.

துயரத்தில் இருக்கும் இஸ்ரேலின் பக்கம் இருப்பதாக அவர் கூறியுள்ளார். இஸ்ரேலுடன் சேர்ந்து தாமும் துயரப்படுவதாகவும் பயங்கரவாதத்திற்கு எதிராக இஸ்ரேலுடன் இணைந்து நிற்பதாகவும் ரிஷி சுனக் குறிப்பிட்டுள்ளார்.  இஸ்ரேல் பக்கம் இன்றும் என்றும் பிரிட்டன் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் இஸ்ரேலிய மொழியில் ‘ஒற்றுமை’ என பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.