கிராமங்களில் கட்சியை பலப்படுத்த வேண்டும்; பாஜகவினருக்கு பிரதமர் அறிவுரை

நாட்டில் எல்லைப்புற கிராமங்களில் பாதுகாப்பையும், கட்சியையும் பலப்படுத்த வேண்டும் என கட்சியினருக்கு பிரதமர் மோடி அறிவுரை கூறியுள்ளார். பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் 2 நாட்கள் டெல்லி நடைபெற்றது. இதில் இவ்வாண்டு நடைபெறவுள்ள ராஜஸ்தான்,…

நாட்டில் எல்லைப்புற கிராமங்களில் பாதுகாப்பையும், கட்சியையும் பலப்படுத்த வேண்டும் என கட்சியினருக்கு பிரதமர் மோடி அறிவுரை கூறியுள்ளார்.

பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் 2 நாட்கள் டெல்லி நடைபெற்றது. இதில் இவ்வாண்டு நடைபெறவுள்ள ராஜஸ்தான், மிசோராம், திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா, சத்தீஸ்கர், கர்நாடகா, தெலங்கானா, மத்திய பிரதேசம், ஆகிய 9 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்தும், வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இதனைதொடர்ந்து, மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் பதவி காலம் நீட்டிப்பு தொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தீர்மானத்துக்கு செயற்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததையடுத்து ஜெ.பி.நட்டாவின் பதவிக்காலம் 2024ம் ஆண்டு ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.டெல்லியில் நடைபெற்ற பாஜக  செயற்குழு கூட்டம் இன்று நிறைவு பெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் நிறைவு விழாவில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்றும் 400 நாட்கள் இருப்பதால் அதற்கு இப்போதே தயாராக வேண்டும் என்று கூறினார். மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்து செல்ல புதிய நிர்வாகிகள் அவசியம் நியமிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

 

மேலும், இளம் தலைமுறைகளை கவர்வது, குறிப்பாக எல்லை கிராமங்களில் பாதுகாப்பையும், கட்சியையும் வலுப்படுத்துவத உள்ளிட்ட விஷயங்கள் இலக்காக கொண்டு செயல்பட உறுதி மேற்கொள்ளபட வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.