பென்னாகரம் அருகே விவசாய நிலத்தைச் சேதப்படுத்திய காட்டு யானையை விரட்ட கோரி வனத்துறையினர் மற்றும் அரசு பேருந்தை சிறைபிடித்து மலைக் கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த பாப்பாரப்பட்டி, பெரியூர், சங்கில்நத்தம், உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் காட்டு யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இதுகுறித்து பலமுறை வனத்துறையினரிடம் தகவல் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மலைகிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நேற்று இரவு காட்டு யானைகள் விவசாய நிலத்தினை சேதப்படுத்தி, ஊருக்குள் புகுந்த நிலையில் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தும் வரவில்லை என கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள், வனத்துறையினர் மற்றும் அரசு பேருந்தை சிறைப்பிடித்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.








