’ஃபேமிலிமேன்’ இயக்குநரின் அடுத்த வெப் தொடரில் நடிக்க சமந்தா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இரட்டை இயக்குநர்களான ராஜ் மற்றும் டிகே இயக்கிய வெப் தொடர், ’ஃபேமிலிமேன்’. மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி நடித்த இந்த தொடர் வரவேற்பை பெற்றதை அடுத்து, இதன் இரண்டாம் பாகம் ’ஃபேமிலிமேன் 2’ என்ற பெயரில் வெளியானது. இதில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி ஆகியோருடன் நடிகை சமந்தாவும் நடித்திருந்தார்.
ஈழத் தமிழ்ப் பெண்ணாக அவர் கிளாமராக நடித்திருந்தார். அவர் நடிப்பு பரபரப்பாக பேசப்பட்டது. அதோடு அவருக்கு பாலிவுட் வாய்ப்பையும் பெற்று தந்ததாகக் கூறப்படு கிறது. இந்த தொடரில் அதிக கிளாமராக நடித்ததால்தான் அவர் கணவருடன் பிரச்னை ஏற்பட்டது என்றும் அதன் காரணமாகவே விவாகரத்து பெற்றனர் என்றும் கூறப்பட்டது. ஆனால், நடிகை சமந்தா இதை மறுத்திருந்தார்.

இந்நிலையில், ராஜ் மற்றும் டிகே இயக்கும் மற்றொரு வெப் தொடரிலும் நடிகை சமந்தா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அமேசான் தளத்துக்காக உருவாக்கப்படும் இந்த தொடரில் பாலிவுட் நடிகர் வருண் தவான் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். மெகா பட்ஜெட் டில் உருவாகும் இந்த தொடரில் அவர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவராக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகை சமந்தா, அடுத்து தமிழ், தெலுங்கில் உருவாகும் யோசதா என்ற படத்தில் நடித்து வருகிறார்.








