முக்கியச் செய்திகள் தமிழகம்

மின்கம்பியினால் மின்சாரம் தாக்கி பள்ளிச் சிறுவன் பலி.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே வயலில் தாழ்வாக சென்ற மின்கம்பியினால் மின்சாரம் தாக்கி பள்ளிச் சிறுவன் பலி .

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள கல்யாணபுரம் கீழே தெருவைச் சேர்ந்த அசுரன் என்கிற புருசோத்தமன் என்பவரது மகன் அகிலன் (14) ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். மாலை புல் அறுப்பதற்காக வீட்டிற்கு எதிரே உள்ள வயல்வெளிக்கு சென்றுள்ளான் உயர் மின்னழுத்த கம்பி வயலில் படும்படி தாழ்வாக சென்றுள்ளது.

இதனை கவனிக்காத அகிலன் தடுமாறி மின்கம்பியில் விழுந்ததில் மின்சாரம் தாக்கி உடல் கருகி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தான். தகவல் அறிந்ததும் உறவினர்கள் ஓடிச்சென்று கதறி அழுதனர் தகவலறிந்த மின்சார வாரியம் உடனடியாக அந்தப் பகுதியில் மின் சப்ளையை துண்டித்தது.

காலையில் தான் ஒன்பதாம் வகுப்பிற்கு பள்ளியில் பெற்றோர் சேர்த்து வந்ததாக கூறி கதறி அழுதது மனதை கலங்கவைக்கும் விதமாக இருந்தது. தகவலறிந்து அங்கு கூடிய உறவினர்களும், பொதுமக்களும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பூம்புகார் கல்லணை சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். மூன்று நாட்களுக்கு மேலாக தாழ்வாக சென்ற மின்கம்பியை தகவல் தெரிவித்தும் சரி செய்யாதவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரியும் மாவட்ட கலெக்டர் நேரில் வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் பூம்புகார் கல்லணை சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது

 

Advertisement:
SHARE

Related posts

கொரோனா தடுப்பு நடவடிக்கை; முக்கிய கோயில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த தடை

Saravana Kumar

தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதி பட்டியல் வெளியீடு!

Halley karthi

மக்களின் நலன்களுக்காகப் பாடுபடுவோம் நடிகைகள் குஷ்பு கௌதமி ட்விட்

Jeba Arul Robinson