2023ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் – கால அட்டவணை வெளியீடு

வருகிற 2023ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான கால அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) போட்டித்…

வருகிற 2023ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான கால அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் 2023ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தேர்வுகளுக்கான கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குரூப் 2க்கு நடந்து முடிந்த முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான பிரதான தேர்வு 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்தாண்டு நவம்பர் மாதம் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்றும், அதற்கான எழுத்துத் தேர்வு 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான காலிப் பணியிடங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இதேபோல் 2023ஆம் ஆண்டில், பல்வேறு பணிகளுக்காக நடைபெறும் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் மாதம் பற்றிய தகவல்களையும், தேர்வு நடைபெறும் மாதம் பற்றிய தகவல்களையும், அவைகளுக்கான காலிப் பணியிடங்கள் பற்றிய தகவல்களையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.