தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் டிஜிபியான சீமா அகர்வாலுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வானையத்தின் டிஜிபியாக பணியாற்றி வருபவர் சீமா அகர்வால். அவருக்கு கூடுதல் பொறுப்பு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வானையத்தின் டிஜிபியாக உள்ள சீமா அகர்வால், தமிழ்நாடு தீயணைப்புத்துறையின் டிஜிபியாக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தீயணைப்புத்துறை டிஜிபியாக பதவி வகித்த பிரஜ் கிஷோர் ரவி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவதாவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.







