சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்!

தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு நாளை முதல் அமல்படுத்தப்படவுள்ளதால் சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில் பொதுமக்கள் சொந்த…

தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு நாளை முதல் அமல்படுத்தப்படவுள்ளதால் சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, இரண்டாம் நாளாக இன்றும், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதையடுத்து, தென் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், சென்னையிலிருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மூலம், சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். பேருந்துகள் மட்டுமல்லாமல், கார்கள், இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களிலும் மக்கள் சென்று கொண்டுள்ளனர். இதனால், செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.