முக்கியச் செய்திகள் தமிழகம்

மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!

முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை தடுப்பதற்காக பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே, மருத்துவ நிபுணர் குழுவுடனும், சட்டமன்ற கட்சி உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவுடனும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் நாளை காலை முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது. இந்நிலையில், புதிய ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

Advertisement:
SHARE

Related posts

UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பாதிரியார் ஸ்டேன் சுவாமி காலமானார்!

Jeba Arul Robinson

5 வருடங்களில் தமிழகத்தில் மதுவை தடை செய்வோம்: ராஜ்நாத் சிங்

Ezhilarasan

தமிழ்நாட்டில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மழை

Halley karthi