1.32 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது: சத்ய பிரதா சாகு

தமிழகம் முழுவதும் இதுவரை 1.32 லட்சத்துக்கும் அதிகமான தபால் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “தமிழகத்தில் 4 லட்சத்து…

தமிழகம் முழுவதும் இதுவரை 1.32 லட்சத்துக்கும் அதிகமான தபால் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “தமிழகத்தில் 4 லட்சத்து 66 ஆயிரத்து 884 பேர் தபால் வாக்கு அளித்த தகுதி பெற்றவர்கள். அவர்களில் 3 லட்சத்து 56 ஆயிரத்து 519 பேருக்கு தபால் வாக்கு படிவங்கள் விநியோகிக்கப்பட்டது. இதுவரை 1,32,350 தபால் வாக்குகள் பதிவாகி உள்ளது.தபால் வாக்கு செலுத்துவோர் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2 ஆம் தேதி காலை 8 மணி வரை வாக்குகளை அனுப்பலாம்.

80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 12 லட்சத்து 40 ஆயிரத்து 309 பேர் உள்ளனர். 92 ,559 பேருக்கு சிறப்பு தபால் வாக்குகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் 30,894 பேருக்கு தபால் வாக்குகள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டையில் சிறிய தவறுகள் இருந்தால் பிரச்சனையில்லை அதற்கான உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்” என அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.