பொள்ளாச்சி திமுக வேட்பாளர் வரதராஜன் கிராமங்கள் தோறும் தொகுப்பு வீடுகள் கட்டித் தருவேன் என வாக்குறுதி அளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வரதராஜன் 1வது வார்டு பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு பொதுமக்கள் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பரப்புரையில் பேசிய அவர், பரப்புரைக்கு செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் நல்ல வரவேற்பு கொடுப்பதாக கூறினார்.
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் அதிமுக கிராமப்புறங்களில் குடிநீர் பிரச்னையை தீர்க்கவில்லை என்றும் ஒரே குடிசை வீட்டில் 3க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் நிலைதான் உள்ளது என்றும் வரதராஜன் கூறினார்.







