திமுகவை எதிர்த்தே எங்கள் பிரச்சாரம்:டிடிவி

திமுக கூட்டணிக்கு வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பொன்.ராஜாவை ஆதரித்து…

திமுக கூட்டணிக்கு வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பொன்.ராஜாவை ஆதரித்து டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “அமமுக மற்றும் தேமுதிக கூட்டணி வெற்றி கூட்டணி.எங்களை கை நீட்டி யாரும் குற்றம் சாட்ட முடியாது. துரோக கூட்டணி பண மூட்டையுடன் நிற்கிறது பனத்தால் வாக்குகளை
வாங்கிவிடலாம் என தவறாக எடை போடுவதாகவும்
அவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். தமிழகம் 7 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கும் நிலையில் தமிழகம் வெற்றிநடைபோடுகிறது என்பது பொய் என்றும் கூறினார். மேலும், திமுக ஆட்சிக்கு வந்தால் வட்டச்செயலாளர்தான் காவல் ஆய்வாளராக இருப்பார்கள். திமுக தப்பித் தவறி ஆட்சிக்கு வந்தால் எல்லோரும் ஆந்திராவிற்கு செல்ல வேண்டியதுதான். என்றும் டிடிவி தினகரன் விமர்சித்தார். மற்ற கட்சிகளை போல் மாதம் தோறும் பணம் கொடுப்பதாக கூறி மக்களை நாங்கள் ஏமாற்ற மாட்டோம். ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் வேலையில்லாத இளைஞர்கள் இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்“ என டிடிவி தினகரன் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.