முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

வாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தன்னுடைய ஜனநாயக கடமையாற்ற நடிகர் விஜய் தன்னுடைய இல்லத்திலிருந்து சைக்கிள் மூலம் வாக்களிக்கும் மையத்திற்கு எளிமையாக முறையில் வந்து தனது வாக்கினைச் செலுத்தினார்.


சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் சைக்கிள் வந்து வாக்களித்தார். நடிகர் விஜய் திடீரென சைக்கிள் மூலம் வந்து வாக்குப்பதிவு செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னுடைய இல்லத்திலிருந்து புறப்பட்ட நடிகர் விஜய் வேகமாகச் சைக்கிள் ஓட்டிக்கொண்டு வந்தார். அவரை பின்தொடர்ந்து ரசிகர் ஏராளமானானோர் இருசக்கர வாகனத்தில் வந்தனர்.

பொதுவாக நடிகர் விஜய் தேர்தல் நடைபெறும் இடத்திற்கு காரில் வந்து வரிசையில் நின்று வாக்களிப்பது வழக்கம். ஆனால் இந்த முறை சைக்கிள் ஓட்டி பொதுமக்கள் தங்களுடைய ஜனநாயக கடமையாற்றவேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளார். அதேபோல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக நடிகர் விஜய் சைக்கிளில் ஓட்டி வந்துள்ளார் என அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுவருகிறார்கள்.


Advertisement:
SHARE

Related posts

ஜெய்பீம்: சூர்யா, இயக்குநர் ஞானவேலுக்கு நல்லகண்ணு பாராட்டு

Saravana Kumar

3வது அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம்: உலக சுகாதார அமைப்பு

Ezhilarasan

தமிழகத்தில் ரெம்டெசிவர் விற்பனை மையம்!