முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

வாக்களித்த நடிகை நமீதா, குஷ்பூ

தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் நடிகை குஷ்பூ மற்றும் நடிகை நமீதா இன்று வாக்களித்தனர்.

2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. முன்னணி நடிகர்களான அஜித் குமார், ரஜினிகாந்த், விஜய், இயக்குநர் சசிகுமார், சிவகார்த்திகேயன் ஆகியோர் வாக்களித்தனர்.

இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் நடிகை குஷ்பூ தனது வாக்கினை செலுத்தினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை குஷ்பூ, ‘ என் தொகுதியில் 4 இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதாகின. ஆனால் விரைவில் பழுது சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. திமுக எப்போதும் விதிமுறைகளைப் பின்பற்றுவது இல்லை. நேரத்தை வீணாக்க வேண்டாம் என்பதற்காக விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்திருக்கலாம். சசிகலாவின் பெயர் வாக்காளர் படியலில் இருந்து நீக்கப்பட்டது, எதிர்பாராத ஒன்று. யார் தேர்தலில் வெற்றி பெறுவார்கள் என்பது ஏப்ரல் 2 ஆம் தேதி தெரியும். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வாக்குப்பதிவின் போது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது.’ என்று அவர் கூறினார்.

மேலும் நடிகை நமீதா தனது வாக்கினைச் செலுத்தினார்.

Advertisement:
SHARE

Related posts

கூட்டணி குறித்து அடுத்த வாரம் முடிவு எடுக்கப்படும் : ராமதாஸ்

Niruban Chakkaaravarthi

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றார் மு.க.ஸ்டாலின்!

Halley karthi

தலையணையால் அமுக்கி மனைவியை கொன்றுவிட்டு கொரோனா நாடகமாடிய கணவன்!

Ezhilarasan