முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம்

குடியுரிமை சட்டத்தை எதிர்க்காத ஒரே அரசு தமிழக அரசுதான்: வைகோ

இந்தியாவில் சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை மத்திய அரசு உருவாகியுள்ளதாக. குடியுரிமை சட்டத்தை எதிர்க்காத ஒரே மாநிலம் தமிழ்நாடு என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.


திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அவர், “இந்தியாவில் இஸ்லாமியர்களை வேற்றுமைப் படுத்தி குடியுரிமை சட்டத்தைக் கொண்டுவந்தார்கள் அதனை எல்லா மாநிலங்களும் எதிர்த்தபோது அதிமுக தலைமையிலான தமிழக அரசு எதிர்க்காமல் ஆதரித்தது. குடியுரிமை சட்டத்தை எதிர்க்காத ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் என்பது எவ்வளவு வெட்கக்கேடான ஒன்று. இதனை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.


நான் மதங்களுக்கு அப்பாற்பட்டவன் நான் அறிஞர் அண்ணாவின் தம்பி தந்தை பெரியாரின் பேரன் இந்த நாட்டில் நடக்கின்ற சம்பவங்களை உங்கள் பார்வைக்குக் கொண்டு வருவது என்னுடைய கடமை. கடந்த 2 மாதத்தில் கேஸ் சிலிண்டர் விலை மட்டும் 225 ரூபாய் உயர்த்தியுள்ளார்கள். விலைவாசி இப்படி உயர்ந்து கொண்டே வருவதால் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். பல்லடம் அரசு மருத்துவமனையின் தரம் உயர்த்தப்படும் பல்லடத்தில் பிரதான தொழிலான விசைத்தறி மற்றும் கறிக்கோழி தொழிலுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் எனவே ஒரு வாக்கு கூட சிதறாமல் மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களிக்க வேண்டும். தமிழகம் ஆபத்தில் உள்ளது எனவே மக்கள் சிந்தித்து திமுகவுக்கும், திமுக கூட்டணிக் கட்சிகளுக்கும் வாக்களிக்க வேண்டும்.

Advertisement:
SHARE

Related posts

வடகிழக்கு பருவ மழை: எதிர்கொள்ள தயாராகும் தமிழ்நாடு அரசு

Saravana Kumar

தமிழகத்தில் இரவு ஊரடங்கா? தலைமை செயலர் ஆலோசனை!

எல்.ரேணுகாதேவி

நாளை முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!

எல்.ரேணுகாதேவி