சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் யார்?

தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து நாளை மறுநாள் மீண்டும் நடைபெறும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணப்பாளர்…

தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து நாளை மறுநாள் மீண்டும் நடைபெறும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் கூட்டம் நடைபெற்றது.


கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி. உதயகுமார் ஆகியோர், வருகிற திங்கள் கிழமை நடைபெறும் கூட்டத்தில் சட்டமன்ற அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் அதிமுக ஒற்றுமையுடன் பலமாக இருக்கிறது. அதிமுக சட்டமன்றத்தில் வலுவான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் முடிந்த பிறகு அதிமுக ஒருங்கிணப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.