பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் கையெழுத்திட்ட 5 முக்கிய கோப்புகளில் ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படுவதும் ஒன்றாகும். இந்த உத்தரவு வரும் மே மாதம் 16 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதனபடி, கொள்முதல் விலையில் பசும் பால் லிட்டருக்கு 4 ரூபாயும், எருமைப் பால் லிட்டருக்கு 6 ரூபாயும் உயர்த்தி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் பசும்பாலின் கொள்முதல் விலை லிட்டருக்கு 28 ரூபாயில் இருந்து 32 ரூபாயாகவும், எருமைப்பாலின் கொள்முதல் விலை 35 ரூபாயில் இருந்து 41 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.