கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஏற்கனவே தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. இந்நிலையில் வருகின்ற மே 10 ஆம் தேதி காலை 4 மணி முதல் 24 ஆம் தேதி காலை 4 மணி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எதற்கெல்லாம் அனுமதி
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காய்கறி கடைகள், இறைச்சிக்கடைகள் மதியம் 12 மணி வரை செயல்படும்.
பால் விநியோகம், பத்திரிகை விநியோகம் செய்வதற்குத் தடையில்லை.
மருந்தகங்கள், மருத்துவமனைகள் முழு நேரமும் செயல்படும்.
பெட்ரோல் பங்குகள் முழு நேரம் செயல்படும்.
முழு ஊரடங்கு நாட்களில் உணவகங்களில் காலை 6 முதல் 10 வரையும், மதியம் 12 முதல் 3 வரையும், மாலை 6 முதல் 9 வரையும் பார்சல் வழங்கப்படும்.
Swiggy, Zomato மூலம் உணவு விநியோகம் மேல்குறிப்பிட்ட நேரங்களில் அனுமதிக்கப்படும்.
நடைபாதை காய் கறிக்கடைகள், பூ கடைகள் மதியம் 12 மணிவரை செயல்படும்.
வங்கிகள் 50 சதவிகித ஊழியர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏடிஎம் முழு நேரம் செயல்படும்.
தேனீர் கடைகளுக்கு நண்பகல் 12 மணி வரை அனுமதி.
நியாய விலைக் கடைகள் காலை 8 முதல் 12 மணி வரை மட்டுமே செயல்படும்.
தபால் சேவை அனுமதிக்கப்படும்.
ரயில்கள் இயங்கும்.
அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்.
எதற்கு தடை?
உள்ளூர், வெளியூர் செல்லும் அரசு மற்றும் தனியார் போக்குவரத்துக்குத் தடை.
வாடகை ஆட்டோ, டேக்ஸி சேவைகளுக்கு அனுமதியில்லை
12 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும்
கடல்கறை, சுற்றுலாத்தளங்களுக்குத் தடை
மதுபானக்கடைகள் முழுவதுமாக மூடப்படும்