தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பான அறிவிப்புகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மாநிலத்தில் வரும் 14ம் தேதி காலை 6 மணியுடன் ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று காலை ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அப்போது, தளர்வுகளுடன் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க அதிகாரிகள் பரிந்துரைத்ததாக தகவல்கள் வெளியாகியது.
அந்த பரிந்துரையில் தொற்று குறைந்த மாவட்டங்களில் அதிகாலை நடை பயிற்சிக்கு அனுமதி அளிக்கவும், டாஸ்மாக் கடைகளை திறக்கவும் பரிந்துரைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில், தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் தளர்வுகள் வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பரிந்துரைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியது.
இதனிடையே, நியூஸ் 7 தமிழ் செய்தியாளரிடம் பேசிய தமிழ்நாடு அரசின் வல்லுநர் குழுவில் இடம்பெற்றுள்ள மூத்த மருத்துவர் குகானந்தம், “மூன்றாவது அலை வராமல் தடுப்பதில் அரசு உறுதியாக இருப்பதாக” தெரிவித்தார்.
இதற்கிடையே கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பான அறிவிப்புகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.







