முக்கியச் செய்திகள் தமிழகம்

கல்லணை பராமரிப்புப் பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர்!

கல்லணை பராமரிப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில், இன்று பராமரிப்புப் பணிகளை ஆய்வு செய்ய, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்லணைக்கு சென்றார். அங்கு காவல்துறையினர் வழங்கிய மரியாதையை, அவர் ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து, கல்லணையில் இருந்து பிரிந்து செல்லும் கால்வாய்கள் குறித்து, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். காவிரி நீர் செல்லும் வழித்தடங்களில், மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் குறித்தும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இந்த ஆய்வின் போது, முதலமைச்சருடன், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடன் வந்தனர்.

Advertisement:

Related posts

மேகதாது அணை திட்டம் குறித்து துரைமுருகன்!

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 93,249 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Saravana Kumar

நாளை துவங்குகிறது தேர்தல் வாக்கு எண்ணும் பணி!

Ezhilarasan