இறுதிக்கட்டத்தில் உள்ள இலகு ரயில் சேவை பணிகள்!

சென்னை தாம்பரம் – வேளச்சேரி இடையேயான இலகு ரயில் சேவை வழங்கப்படுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை பணிகள், இறுதிக்கட்டத்தில் உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்னையில் மின்சார ரயில், பறக்கும் ரயில், மெட்ரோ…

சென்னை தாம்பரம் – வேளச்சேரி இடையேயான இலகு ரயில் சேவை வழங்கப்படுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை பணிகள், இறுதிக்கட்டத்தில் உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மின்சார ரயில், பறக்கும் ரயில், மெட்ரோ ரயில் என மூன்று வகையான ரயில் போக்குவரத்து சேவை வழங்கப்படும் நிலையில், இலகு ரயில் சேவையும் தொடங்கப்படும் எனக் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுருந்தது.

இலகு ரயில் சேவை சாத்தியக்கூறு பணிகள் குறித்து சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் சிட்லப்பாக்கத்தைச் சேர்ந்த தயானந்த கிருஷ்ணன் என்பவருக்கு பல்வேறு பதில்களை அளித்துள்ளது.

தாம்பரம் – வேளச்சேரி இடையே அமையவுள்ள 15.5 கிமீ இலகு ரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கைக்காக ரூ. 26 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், இலகு ரயில் சேவை உயர்மட்ட வழித்தடத்தில் அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது வேளச்சேரி மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களுடன் இணைக்கபடும் வகையில் இலகு ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், சாத்தியக்கூறு அறிக்கைப் பணிகள் முடிவடைந்த பிறகு இரயில் நிலையங்கள் எண்ணிக்கை குறித்த தகவல்கள் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.