மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தால் தமிழ்நாட்டில் 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நான்கு மாவட்ட உணவு வழங்கல் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் சக்கரபாணி ஆய்வு நடத்தினார்.
இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து உரையாற்றிய சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, தமிழ்நாட்டில் உள்ள 2 கோடியே 14 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு, 37 ஆயிரத்து 723 ரேஷன் கடைகள் மூலம் பொது விநியோகத் திட்ட பொருட்கள் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
பிரதமர் கொண்டுவந்த உணவு பாதுகாப்பு சட்டத்தால், தமிழ்நாட்டில் உணவு பாதுகாப்பு துறைக்கு புதிதாக 8 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவு ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் மாநிலத்திற்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் அவர் கூறினார். மேலும், பொதுமக்களின் இருப்பிடத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவுக்குள் ரேஷன் கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.







