என்.சங்கரய்யாவின் 100-வது பிறந்த நாள்: தலைவர்கள் நேரில் வாழ்த்து

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான என். சங்கரய்யாவின் நூறாவது பிறந்தநாளை ஒட்டி , அவருக்கு அரசியல் தலைவர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித் தனர். சுதந்திரப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான என். சங்கரய்யாவின் நூறாவது பிறந்தநாளை ஒட்டி , அவருக்கு அரசியல் தலைவர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித் தனர்.

சுதந்திரப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என். சங்கரய்யாவுக்கு இன்று நூறாவது பிறந்த நாள். இதையொட்டி தலைவர்கள் பலர் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சென்னை குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும். மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி, டி.கே. ரங்கராஜன், ஜி. ராமகிருஷ்ணன், கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் சங்கரய்யாவுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக சார்பில் வன்னியரசு ஆகியோரும் சங்கரய்யாவை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.


பண்பின்‌ அடையாளம்: சங்கரய்யாவுக்கு ஓபிஎஸ் வாழ்த்து

https://twitter.com/OfficeOfOPS

சங்கரய்யாவுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பதாவது: விடுதலைப்‌ போராட்ட வீரரும்‌, மார்க்சிஸ்ட்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சியின்‌ மூத்தத்‌ தலைவரும்‌, உழைப்பாளர்களின்‌ உற்றத்‌ தோழனாக இருந்து பல போராட்டங்களை நடத்தியவரும்‌, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக திறம்பட பணியாற்றியவரும்‌, எளிமையின்‌ உருவமாகவும்‌, பண்பின்‌ அடையாளமாகவும்‌ விளங்குகின்ற என்‌. சங்கரய்யா இன்று நூறாவது அகவையில்‌ அடியெடுத்து வைத்திருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. அன்னாரின்‌ பிறந்த நாளான இன்று அவருக்கு எனது மரியாதையினையும்‌, வணக்கத்தினையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இவ்வாறு கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.